Saturday, October 27, 2007

சிக்கு(ம்) கோலங்கள்....

**********************
ஒரு தடாக தாகத்தில்
தவிக்கிறேன் நான்...

பாவை நீயோ
தண்ணீர் குடத்துடன்..

ஓட எத்த‌னிக்கிறாய்
என்னைக் கண்டு....

தாவிப் பற்றுகிறேன்
உன் தாவணித் தலைப்பு...

தலைப்பு கிழிந்து
கையோடு வந்தது...

உறக்கத்தில் நான்
உதைத்துக் கிழித்த போர்வையில் இருந்து.....

*************************
நான் அழகாய் இருப்பதாய்
எல்லாரும் சொல்கிறர்கள்...

அவர்களுக்கு எப்படித் தெரிந்தது
நான் உன்னை நினைத்துக் கொண்டிருப்பது...

************************

நீ எப்போது பிறந்திருக்கிறாயோ
தெரியாது...

நீ எங்கே பிறந்திருக்கிறாயோ
அதுவும் தெரியாது...


எனக்கு
தெரிந்தது அனைத்தும்
ஒன்று தான்

நீ
எனக்காகவே பிற‌ந்திருக்கிறாய்...
******************
உன் இருதயம்
தொலைந்து போனதாய்
என்னிடம் சொன்னாய்...

இருக்குமிடம் சொல்ல‌
என் நெஞ்சின்
இடதுபுறம் தொட்டுக்காட்டினேன்...

இன்னமும் எதை நீ தேடுகிறாய்
என் சட்டைப்பைக்குள்....
*********************

முட்டாள் என்றென்னை
முன்மொழிந்தவளே..

சவமாகும் வரை
தவம் செய்தேன்
உன்னிடம் சாபம் வாங்க....

நீ யுத்தம் அறிவித்தபோது
நிராயுதபாணியாய்
நிற்கிறேன் நான்...

காரண‌ம் தெரியாமலே
கைப்பிடி போட்டுத் தந்திருக்கிறேன்
உன் கத்திக்கு....

என் இருதயம் தான்
நறுக்கப் போகிறாய்
என்று
இறுதிவரை உணராமல்....

இரும்பல்ல என் இருதயம்
அதனால் தான்
உன் வாள்வீச்சில் வலுவிழந்து
தொங்கிப்போய்விட்டது அந்த‌
தோற்கேட‌ய‌ம்....

குத்திக் காட்டுகிறேன்
என்பாய்...
இல்லையில்லை
நீ
குத்திய‌தைக் காட்டுகிறேன்...

வாள்பிடித்த‌ கைக‌ளில்
வ‌டு ம‌றைந்து போயிருக்க‌லாம்....
ர‌ண‌ப்ப‌ட்ட‌ இத‌ய‌மின்னும்
ர‌த்த‌ம் சொட்டிக் கொண்டேதான்
இருக்கிற‌து...

முட்டாள் என்றென்னை
முன்மொழிந்த‌வ‌ளே........

No comments: