Saturday, December 1, 2007

நிலாவோடு வாழ்பவன்

ஒரு மெய்
இரண்டு உயிர்கள்
ஏராளமான ஆயுதங்கள் கொண்ட‌
அதிசய தமிழ்
நீ

*****************************************************

குத்துகின்ற முட்களை
குற்றம் சொல்லாதே...

உன்னை முத்தமிட
‌இந்த உலகில்
யாருக்கு தான் ஆசையில்லை...

*****************************************************
நிலாவில் வாழமுடியுமா

என்று தெரியவில்லை...

ஆனால்

நிலாவோடு வாழமுடியும்
என்று தெரிந்துகொண்டேன்
உன்னைப் பார்த்து...

****************************************************

பக்கம் பக்கமாய்
கவிதை எழுதுகின்றன
கைகள்....

ஒற்றை வார்த்தையை மட்டும்
ஓயாமல் உச்ச‌ரிக்கின்ற‌து
ம‌ன‌சு.....

"நீ".....
***************************************************


வெட்க‌மே உன‌க்கு
முக‌மூடி தானே...

பிற‌கு ஏன்
வெட்க‌ப்ப‌ட்டு
கைக‌ளால் வேறு மூடுகிறாய்...

***************************************************
வ‌ண்ணத்துப் பூச்சி

ம‌க‌ர‌ந்த‌ங்க‌ளை சேக‌ரிக்கும்...

ஆனால்
புன்ன‌கை ம‌க‌ர‌ந்த‌ங்க‌ளையே
உற்ப‌த்தி செய்யும்
அதிச‌ய‌ வ‌ண்ண‌த்துப்பூச்சி
நீ

****************************************************

1 comment:

Rakesh Nath said...

Fantaaaaaaaasticc.......
Aana.. thambee yaar antha ponnu... Yaaro maattikiruche..!!!!!!!....

Something is happening around.. I am sure..

Sollunga.... Yar antha ponnu..????