Tuesday, December 4, 2007

மகரந்தப் பூக்கள்....

உன் தெருவின்
அத்தனை வீட்டு வாசலிலும்
பூக்கோலம்...

உன்
ஒருத்தியின் வீட்டில்
மட்டும் தான்
பூவே வரைந்த கோலம்...

**********************************
உனது வீட்டை
அடையாளம் கண்டுபிடிப்பது
ரொம்பவே சுலபம்...

தபால்காரன் கூட‌
இதயத்தை மட்டுமே தந்துவிட்டுப் போகிறானே
இது தானே
உன் வீடு....

******************************************
எப்போதாவது
பொட்டுவைக்க மறந்து
நீ கல்லூரிக்கு வரும் நாட்கள்
அறிமுகம் செய்துவைத்தன‌
எங்களுக்கு......

அமாவாசையையும்
பௌர்ண‌மியையும்....

*****************************************
உன‌க்கே தெரியாம‌ல்
உன் நோட்டுப்புத்த‌க‌த்தை
திருடியிருக்கிறேன்......

நாங்க‌ள் எல்லாம்
நோட்டுப்புத்த‌க‌த்தில்
ம‌யிலிற‌கு வ‌ள‌ர்க்கும்போது

ஒரு ம‌யில்
த‌ன் பாட‌ப்புத்த‌க‌த்தில்
எதை வ‌ள‌ர்க்கிற‌து
என‌த் தெரிந்துகொள்ளும்
ஆவ‌லில்.......

*****************************************
எந்த‌ வ‌டிவ‌த்தில் கும்பிட்டாலும்

சாமி சாமியே தான்...

எந்த‌ உடையில் நீ வ‌ந்தாலும்
அழ‌கு அழ‌கே தான்....

***************************************

சீக்கிற‌ம் ஏறு...

உன் வ‌ருகைக்காக‌
காத்திருந்து காத்திருந்து....

"ந‌க‌ராப்" பேருந்து ஆகிவிட்ட‌து
ந‌க‌ர‌ப் பேருந்து...

******************************************
திருக்குற‌ளை விட
மிகச் சிறிய‌ க‌விதையை
சொல்ல‌ வேண்டும் என்றார்
த‌மிழாசிரிய‌ர்...

ம‌ன‌சுக்குள்
சொல்லிப்பார்த்துக் கொண்டேன்
உன் பெய‌ரை.....

*************************************

என்னோடு
ச‌ண்டையிட்டுக்கொண்டு
நீ பேசாத‌ நாட்க‌ளில்
உண‌ர்ந்தேன்....

உல‌கின்
மிக‌க் கொடிய‌ நோய்
ச‌ர்க்க‌ரைவியாதி என்று....

*************************************
அம்மைய‌ப்ப‌னை
மூன்று முறை சுற்றி
வ‌ந்த‌தும்

க‌னி கிடைத்துவிட்ட‌து
விநாய‌க‌ருக்கு....

உன்னையே
எத்த‌னை முறை சுற்றினாலும்
க‌னிவ‌தேயில்லை
உன் ம‌ன‌சு...

********************************
எட்டாத‌ தொலைவில் இருந்தாலும்
சூரிய‌னை த‌ரிசிக்கிர‌
உல‌க‌த்தைப் போல‌

எட்ட‌ இருந்தே
உன்னை ஸ்ப‌ரிசிக்க‌ முடியும்
என்னால்.....

********************************

எந்த‌க் க‌ன‌விலும்
உன் முக‌ம் தெரிவ‌தே இல்லை...

இதற்காக‌ தின‌மும்
க‌ன‌வு க‌ண்டு தோற்ற‌து தான்
மிச்ச‌ம்...

உயிர்த்துடிப்பு மாதிரி
நீ
உயிரை வாங்குகிற‌ துடிப்பு.....

*******************************

1 comment:

Prakash said...

engayooo poitteenga krishnan..
romba nalla irukku