Friday, January 4, 2008

எது சொன்னால் விழுவேன்...

நீ "சரி" என்று சொல்
நான் சரிந்து விழுவேன்....

நீ "தவறு" என்று சொல்
நான் தவறி விழுவேன்...

நான்
"எது சொன்னாலும் விழுவாயா??"
என்கிறாய்...

நீ எதுவும் சொல்லாமலேயே
விழுந்துவிட்டேனே
உன் மேல் காதலில்....

**********************************

நேற்று என் கனவில்
நீ மழையில்
நனையக் கண்டதும்...

ஓடோடிச்சென்று
குடை பிடித்திருக்கிறேன்...

என் வீட்டு
ரோஜாச்செடிக்கு.....

**********************************

இர‌வில்
கொசுவலை க‌ட்டிக் கொண்டு
உற‌ங்கு என்றாள் அம்மா....

நானோ
உன் நினைவுக‌ளையும்
த‌லைய‌ணையையும்
க‌ட்டிக் கொண்டு உற‌ங்குகிறேன்...

************************************

உல‌க‌ உருண்டை
இன்ன‌து என்று
தெரிந்துகொண்டேன்...

உன‌க்கே தெரியாம‌ல்
உன் ஜாமெட்ரி பாக்ஸிலிருந்து
நான் திருடிய‌
நெல்லிக்காயில்....

********************************

"எதாவ‌து பேசுங்க" என்று
நீ சொன்ன‌தும்

என்ன‌ கேட்ப‌து என்று தெரியாம‌ல்
வ‌ழிகேட்டிருக்கிறேன்..

நான் கையிலேயே
வைத்திருந்த‌
என் வீட்டு முக‌வ‌ரிக்கு.....

********************************

க‌ண்ணாடி முன் சோம்ப‌ல் முறிக்காதே....

உன் அழ‌கில் ம‌ய‌ங்கி
நிலைக்கண்ணாடி கூட‌
நிலை குலைந்த‌ க‌ண்ணாடி
ஆகி விடுகிற‌து.....

********************************

உன்னைப் பார்த்த‌தும்
விள‌ங்கிக் கொண்டேன்..

நேரான‌ உன் தெருமுனையில்
இருக்கும்
"எச்ச‌ரிக்கை அபாய‌ வ‌ளைவுக‌ள்"
என்ற‌ ப‌ல‌கையின் கார‌ண‌த்தை....

*******************************

உடைப‌டுவோம் என்று
தெரிந்தே காத்திருக்கும்
பிளாஸ்டிக் பை நான்....

நீயே வ‌ந்து
ந‌ன்றாக‌ ஊதி
உடைத்துவிட்டுச் செல்....

********************************

இர‌வில் கொசுத்தொல்லை
அதிக‌மா என்றார்க‌ள் என்னிட‌ம்...

இல்லை தேனீக்க‌ள் தொல்லை
என்றேன்...

நீ என்
க‌ன‌வில் வ‌ருவ‌து கூட‌
தேனீக்களுக்கு தெரிந்துவிடுகிற‌து.....

***********************************

2 comments:

Prakash said...

Krishnan,
puthaandhu vaazhththukkal..
ungalidam pidithathu "virasam illaa vaarthaigaL"..

"en vazhi thani vazhi" maathiri ungakukku endru oru thani baaNiyai pinpatruvathu piditha vishayam.

ungal kavaithaigaLai padikkum thaRunam enakku thoonuvathu.. neengal "kaadhalai" kaadhalikkareergalaa allathu "thamizhai" kaadhalikkareergalaa endru ???

kaadhalum-tamizhum ungaludaa rendu kaNkaLaai irukkaa vaazhththukkaaL

Sankar said...

Krishnan,

This is shankar from Chennai. Saw ur Kavithagal in Blogger. Very Gud.

I don't know how express my comments...From "Edu sonnal vizhven" is simply and very thoughful kavithai.

Expecting more like this in upcoming future.

wish you all the best.

Regards, Shankar - Chennai.